ரிஷப் பண்ட் என் மகனைப் போன்றவர்.. அவருக்கு விபத்து ஏற்பட்ட போது மிகவும் பதறி விட்டேன்.. டெல்லி கேப்டன் குறித்து பேசிய ஷாருக்கான்

நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பின்னர் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய போது அவருக்காக வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். அப்போது அருகில் இருந்த மற்ற நபர்கள் உடனடியாக அவரை காரை விட்டு வெளியே கொண்டு வந்தனர். கார் சம்பவ இடத்திலேயே தீப்பிடித்து எரிந்து கருகியது.

- Advertisement -

பலத்த காயம் அடைந்த ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட காயத்தில் இருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆகியது. பண்டின் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இந்த இரண்டுமே இவரை ஐபிஎல் களத்திற்குள் மீண்டும் விளையாட வழிவகுத்துள்ளது. நன்றாக நடக்கவே சில வருடம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், தனது கடின உழைப்பின் மூலம் இரண்டு வருடங்களிலேயே மீண்டும் டெல்லி அணிக்கு கேப்டனாக பதவி ஏற்றார்.

- Advertisement -

தற்போது இந்த ஐபிஎல்லில் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் டெல்லி அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்திய டி20 உலக கோப்பையிலும் இவர் நிச்சயம் இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

அப்போது கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் போட்டி முடிந்த பிறகு இரண்டு அணி வீரர்களையும் சந்தித்து பேசிவிட்டு, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டிடம் சிறிது நேரம் கலந்துரையாடி இருக்கிறார். அதற்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி அளித்த ஷாருக்கான் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்ட போது அதன் சிசிடிவி வீடியோக்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்த அவர் மேலும் கூறும்போது
“ரிஷப் பண்ட்க்கு கார் விபத்து ஏற்பட்டபோது அதன் சிசிடிவி காட்சிகளை பார்த்து மிகவும் பயந்துவிட்டேன். அவர் என்னுடைய மகனைப் போன்றவர். அவருக்கு கவலைப்படும் விதமாக எந்த ஒரு காயமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மிகவும் பயந்தேன். தற்போது நல் வேலையாக அவர் அணியில் வந்து விளையாடிக் கொண்டிருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஒரு நியாயம்.. சஞ்சு சாம்சனுக்கு ஒரு நியாயமா.? அவரை டி20 உலக கோப்பையில் இந்த இடத்தில் களம் இறக்குங்க.. ஆதரவு தெரிவிக்கும் கௌதம் கம்பீர்

பண்ட் விபத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 மாதம் 454 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொன்டு வெற்றிகரமாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி அணி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles