பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக இதே தவறை செய்கிறார்கள்.. தோல்விக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பேட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுச் சென்னையை வீழ்த்தியது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

லக்னோவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. ரஹானே 24 பந்துகளில் 36 ரன்களும், ருத்ராஜ் 13 பந்துகளில் 17 ரன்களும், ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களும் மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்கள், கடைசியாக மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 27 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் டீ காக் ஆகியோர் சிறப்பாக விளையாடி அருமையான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவர்கள் இருவரையும் சென்னை பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்ததாக டீ காக் 43 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இறுதியாக பூரான் 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்து லக்னோ அணி வெற்றி பெற வித்திட்டார். இது சென்னை அணிக்கு மூன்றாவது தோல்வியாகும். தோல்விக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் பவர் பிளேவில் எங்கள் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுவதே தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்த அவர் மேலும் கூறும் பொழுது
“எங்கள் பேட்டிங்கில் நன்றாக முடித்தோம். அந்த சூழ்நிலையில் அதற்கு மேல் எதுவும் கேட்டிருக்க முடியாது. நாங்கள் பவர் ப்ளேவிற்கு பிறகு கிடைத்த அருமையான தொடக்கத்தை பயன்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கு கொஞ்சம் குறைவானதுதான்.

- Advertisement -

ஏனெனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக எடுக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரியான ஆடுகளங்களில் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று விட்டால் அதன் பிறகு பணியால் ஆடுகளம் பேட்டிக்கு சாதகமாக மாறிவிடும். அதன் பிறகு எளிதாக ரன்களை குவிக்கலாம். 190 ரன்கள் சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி வருகின்றனர்.

இதையும் படிங்க:இது ஒரு மினி சென்னை மைதானம்.. தோனி களம் இறங்கியதும் பவுலர்ஸ் பயந்துட்டாங்க.. வெற்றிக்குப் பின் கேஎல் ராகுல் பேட்டி

அதில் முன்னேற்றம் காண வேண்டும். விக்கெட்டுகளை எடுத்தால்தான் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு தள்ள முடியும். அடுத்த போட்டியில் லக்னோ அணியை சென்னையில் விளையாடுவதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles