இது ஒரு மினி சென்னை மைதானம்.. தோனி களம் இறங்கியதும் பவுலர்ஸ் பயந்துட்டாங்க.. வெற்றிக்குப் பின் கேஎல் ராகுல் பேட்டி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கிடையான 34 வது ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் சரியான திட்டத்துடன் களமிறங்கி வெற்றி பெற்றதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

லக்னோவில் நடைபெற்ற 34 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரகானே 24 பந்துகளின் 36 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரட்சின் ரவிந்திரா முதல் பந்திலயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு களம் இறங்கிய ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களும், மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்கள் குவித்தனர். இதில் மூன்று சிக்சர்களும் அடங்கும். இறுதியாக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி, ரசிகர்களின் ஆரவாரமான கரகோஷங்களுக்கு மத்தியில் 9 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 28 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இவரின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. பின்னர் 177 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டீகாக் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கே எல் ராகுல் 53 பந்துகளில் 82 ரன்களும், டிகாக் 43 பந்துகளில் 54 ரன்கள் குவித்து லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இதனால் லக்னோ அணி 19 ஓவரிலேயே 180 ரன்கள் இலக்கை இரண்டு விக்கெடுகளை இழந்து எட்டியது. வெற்றிக்கு பின்னர் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் தோனியின் வருகையை பார்த்து எங்கள் பந்துவீச்சாளர்கள் பயந்துவிட்டதாக கூறியிருக்கிறார் இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“இன்றைய நாள் முடிவில் இந்த உணர்வு நன்றாக இருக்கிறது. வெற்றி பெரும்பொழுது அனைத்துமே நன்றாக தோன்றும். நாங்கள் எங்கள் திட்டங்களில் சரியாக களம் இறங்கினோம்.

- Advertisement -

திட்டத்தில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எங்களது பந்துவீச்சாளர்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு பயன்படுத்தினேன். நாங்கள் எங்கள் திட்டங்களில் சரியாக இருந்த பொழுது 160 ரன்கள் குவித்தது சற்று வருத்தம் அளிக்கிறது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த பொழுதும் மகேந்திர சிங் தோனி உள்ளே வந்த பொழுது அதிக சத்தத்தால் எங்கள் பந்து வீச்சாளர்கள் சற்று அழுத்தத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க:எனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த தருணம் தோனி எனக்கு இதைக் கொடுத்ததுதான்.. தோனியை புகழ்ந்து பேசியிருக்கும் கே எல் ராகுல்

இதனால் எங்களது பந்துவீச்சாளர்கள் 15 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டனர் சிஎஸ்கே சுழற் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று தெரியும். எனவே அதிரடியாக ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். டி காக்கும் அற்புதமாக பேட்டிங் செய்தார். இது ஒரு மினி சென்னை மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வை கொடுத்தது. இப்படி ஒரு கூட்டத்திற்கு மத்தியில் விளையாடுவது எங்கள் அணி விரும்புகிறது. அடுத்ததாக அவர்களை சென்னையில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles