தனக்கு கிடைக்க வேண்டிய இந்திய கோச் பதவி.. மோர்கலுக்கு கொடுத்த கம்பீர்.. முதல் முறை பேசிய ஜாகீர் கான்.. உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள்

கடந்த ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலகக்கோப்பை போட்டி தொடருடன் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். 2027 ஆம் வருட 50 ஓவர் உலகக்கோப்பை வரை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக தொடர்வார் என பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

மேலும் தனக்குத் தேவையான துணை பயிற்சியாளர்களை நியமிக்கும் பொறுப்பையும் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ வழங்கியது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தன்னுடன் பணியாற்றிய அபிஷேக் நாயர் மற்றும் நெதர்லாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரை துணை பயிற்சியாளர்களாக நியமிக்க கம்பீர் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ அவர்கள் இருவரையும் இந்திய அணியின் அசிஸ்டன்ட் கோச் பதவிக்கு தேர்வு செய்தது

- Advertisement -

இந்திய அணியின் இலங்கை தொடரின் போது பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வு செய்யப்படவில்லை. பிசிசிஐ நிர்வாகம் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தது. மேலும் முன்னாள் இந்திய வீரர்கள் வினய் குமார் மற்றும் தமிழக வீரர் பாலாஜி ஆகியோரும் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் மோர்ன் மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என பிசிசிஐ இடம் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

அவரது கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ மோர்ன் மோர்கல் இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சி பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவித்தது. இந்திய ரசிகர்களும் முன்னால் வீரர்களும் ஜாகீர் கான் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மோர்ன் மோர்கல் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது அவர்களுக்கு சிறிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகிர் கான், மோர்ன் மோர்கல் இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இது தொடர்பாக கிரிக்பஸ் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிர் கான் “மோர்ன் மோர்கல் ஒரு சிறந்த பயிற்சியாளர் என தெரிவித்தார். மேலும் அவருடன் ஐபிஎல் போட்டிகளில் நீண்ட காலம் இணைந்து பணியாற்றியதாக கூறிய ஜாகிர் கான், மோர்ன் மோர்கல் இந்திய வீரர்களுடன் சிறப்பாக இணைந்து பணியாற்றுவார் எனவும் தெரிவித்தார். அவரது பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என தெரிவித்த ஜாகீர் கான், மோர்ன் மோர்கல் இந்திய பந்துவீச்சாளர்கள் மேலும் சிறப்பாக செயல்பட தன்னுடைய பங்களிப்பை வழங்குவார்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தான் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை என்றாலும் இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்தும் ஜாகீர் கான் அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜாகிர் கான் ஐபிஎல் தொடரில் வீரர்கள் ரிட்டன்ஷன் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்படுவது அவசியம் என தெரிவித்த ஜாகீர் கான் அப்போதுதான் ஒரு அணியில் பேலன்ஸ் சரியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகள் 200 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜாகிர் கான் சர்வதேச போட்டிகளில் 610 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 2011 ஆம் வருட உலகக்கோப்பை போட்டித் தொடரை இந்தியா கைப்பற்ற ஜாகீர் கானின் பங்கும் முக்கியமானது. 2011 ஆம் வருட உலகக் கோப்பையில் 21 விக்கெட் வீழ்த்திய ஜாகீர் கான் அதிக விக்கெட் கேள்வியில் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles