வீடியோ: அசிங்கப்படுத்திய இளம் வீரர்.. பதிலுக்கு நட்சத்திர இந்திய வீரர் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

- Advertisement -

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதன் பிறகு வந்த ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரமன்தீப்சிங் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி 4 சிக்ஸர் என 35 ரன்கள் குவித்தார். அதன் பிறகு களம் இறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் குவிக்க, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரசல் 23 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்களை விளாசி 64 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கடந்த சில சீசன்களாகவே ஃபார்ம் இன்றி தவித்து வந்த ஆண்ட்ரே ரசல் இந்த சீசன் முதல் போட்டியிலேயே பார்முக்கு வந்திருப்பது கொல்கத்தா அணியை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இது கொல்கத்தா ரசிகர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. இவரின் அதிரடியால் கொல்கத்தா அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவியது.

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அனுபவ வீரர் மயங்க் அகர்வால் மற்றும் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்நிலையில் மயங்க் அகர்வால் அவுட் ஆன போது கொல்கத்தா அணி வீரர் ஹர்ஷித் ரானா அவரை வழி அனுப்பிய விதம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஆட்டத்தின் ஆறாவது ஓவரை வீசிய ஹர்சித் ரானா மூன்றாவது பந்தை மயங்க் அகர்வாலுக்கு பவுன்சராக வீசினார். இதனை எதிர்கொண்ட மயங்க் லெக் சைடில் தூக்கி அடிக்க எல்லை கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த ரிங்கு சிங் அதனை அற்புதமாக கேட்ச் பிடித்து மயங்க் அகர்வாலை அவுட் செய்தார்.

மயங்க் அகர்வால் கிரீசை விட்டு நகரும்போது எதிரே வந்த ஹர்சித் ரானா அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைப்பது போல சைகை செய்தார்.பதிலுக்கு மயங்க் அகர்வால் அவரை பார்த்து முறைத்தபடி மைதானத்தில் இருந்து வெளியேறுவார். ரானாவின் இந்த செயலைப் பார்த்த வர்ணனையாளர்கள் ஒரு அனுபவ வீரரிடம் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles