தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்னும் நான்கு ஆட்டங்களே மீதி உள்ள நிலையில் இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து இருக்கின்றன. நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை விட நெட் ரன் ரேட் அதிகம் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. நாளை பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் கொல்கத்தாவில் வைத்து தங்களது இறுதி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று விடும். ஆனால் அந்த அணி அதிக நெட் ரன் ரேட் பெற்று இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே நான்காவது இடத்திற்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை விட அதிக ரன் ரேட் பெற வேண்டுமானால் இங்கிலாந்து அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
இதற்கு ஒரே வாய்ப்பு பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் ஆடினால் பாகிஸ்தானின் உலகக்கோப்பை அரை இறுதி வாய்ப்பு கனவாகவே கரைந்து விடும். ஏனென்றால் இரண்டாவது பேட்டிங் செய்து ஆடும் போது இங்கிலாந்து அணி எடுத்திருக்கும் இலக்கை பாகிஸ்தான் 2.4 ஓவர்களில் எட்ட வேண்டும் அப்போதுதான் நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை விட அதிகம் பெற முடியும். இதற்கு ஒரே வழி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து நான் இருக்கும் அதிகமான ரன்கள் பெற்று இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இதற்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருவதாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போட்டிக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் பாகிஸ்தான் அணி எந்தவித சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறது எனவும் அரை இறுதி வாய்ப்பிற்காக இறுதிவரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியா வந்தது பாகிஸ்தான்.
அந்த அணியின் முதல் இரண்டு போட்டிகளிலும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை அபாரமாக வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தொடர்ந்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியுடன் பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற்றது. எனினும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணி களுக்கிடையேயான போட்டியின் போது இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தால் அது பாகிஸ்தானிற்கு சாதகமாக அமைந்திருக்கும்.
ஆனால் அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு அதன் ரன் ரேட்டையும் நன்றாக உயர்த்திக் கொண்டது இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு இருக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது எனவே மிகப்பெரிய வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை ஜெயிக்க வேண்டிய நெருக்கடிக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டு இருக்கிறது இது தொடர்பாக இங்கிலாந்து அணியுடன் கடுமையாக போராடி வெற்றி பெற முயற்சி செய்வோம் என பாபர் அசாம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் பாபர் அசாம் ” நாளை இங்கிலாந்து அணியுடன் நடைபெற இருக்கும் போட்டியில் நெட் ரன் ரேட்டை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடப் போகிறோம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு சுத்த மாட்டோம். ஆனால் 50 ஓவர்களையும் பவர் பிளே போல விளையாட இருக்கிறோம். பகார் ஜமான் 20-30 ஓவர்கள் களத்தில் இருந்தால் நிச்சயமாக எங்களால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியும். அரை இறுதியில் தகுதி பெறுவதற்கு இதுதான் ஒரே வாய்ப்பு” என அவர் தெரிவித்துள்ளார்.

