தற்போது ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் பைபவ் சூரியவன்சியை இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும் என சேவாக் கூறியிருக்கிறார்.
நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி வெறும் 26 பந்தில் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் 78 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார்.
இதுகுறித்து பேசிய சேவாக் கூறும்போது ” பல வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது இவரை மட்டும் ஏன் பாராட்டுகிறீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். ஏனென்றால் இவர் உண்மையாகவே சிறப்பாக விளையாடுகிறார். ஒரு குழந்தையாக இருந்து கொண்டு பும்ராவையே அடித்து நொறுக்குகிறார்”
“உதாரணத்துக்கு அபிஷேக் ஷர்மாவை எடுத்துக் கொண்டால் அவரை நாம் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று சொல்ல மாட்டோம். ஆனால் இந்தப் பையனை நாம் அப்படி சொல்லுவோம். இன்னுமே போதிய அளவுக்கு இந்த பையனை நாம் பாராட்டவில்லை” என்று கூறி இருக்கிறார்

