இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரரான விராட் கோலி கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் அவர் நடத்தி வரும் பார் ஒன்றில் எழுந்த சர்ச்சையால் பார் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.
விராட் கோலி கிரிக்கெட் தாண்டி பல்வேறு பிசினஸ்களிலும் ஈடுபட்டு வரும் ஒரு பிசியான மனிதர். அதுமட்டுமல்லாமல் பூமா நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார். தான் கிரிக்கெட்டில் புகழோடு இருக்கும்போதே பல்வேறு தொழில்களை செய்து விட வேண்டும் என்ற தெளிவான மனநிலையில் இருக்கும் விராட் கோலி பார் மற்றும் ஹோட்டல்களை பெங்களூரு, புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்றவுடன் டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறார். இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை கொண்டாட்டத்தை முடித்த கையோடு லண்டனில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க விராட் கோலி லண்டனுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் பெங்களூருவில் அவர் நடத்தி வரும் 18 என்ற பார் ஒன்றில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. பெங்களூரில் உள்ள அனைத்து பார்களிலும் நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலியின் 18 பார் மட்டும் 1.30 மணி வரை இயங்குவதாக தகவல் வெளியான நிலையில் அங்கே விரைந்து கண்காணித்த போலீசார் அதனை உறுதிப்படுத்தி பாரின் மேலாளர் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விராட் கோலிக்கு பெங்களூரில் மட்டுமல்லாமல் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் பார் மீது வழக்கு பதிவு போடப்பட்டுள்ள செய்தியை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:அப்போ நான் தோனிய பத்தி என்ன சொன்னேனோ.. அதேதான் இப்ப கோலிக்கும்.. ருத்ராஜ் ஓபன் டாக்
தற்போதைய கிரிக்கெட் உலகில் பணக்காரர்கள் பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விராட் கோலி செய்து வரும் தொழில்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு முக்கிய நிறுவனங்களுக்கும் அவர்தான் விளம்பர தூதராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவருடைய கணக்கில் அவர் இடும் ஒவ்வொரு பதிவும் இவ்வளவு கோடி என சமூக வலைதளங்களின் ஆப்கள் விராட் கோலிக்கு வழங்குகிறது. சமீபத்தில் அவருடைய சொத்து மதிப்பு விவரம் குறித்து கணக்கிட்ட போது அது ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்று தெரியவந்துள்ளது.

