அப்போ நான் தோனிய பத்தி என்ன சொன்னேனோ.. அதேதான் இப்ப கோலிக்கும்.. ருத்ராஜ் ஓபன் டாக்

டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கையோடு இந்தியாவின் ஜாம்பவான் வீரர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி அவர்களது இடத்தில் சரியான வீரர்களை நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்ப ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகளில் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வரும் வேளையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா 46 பந்துகளில் தனது சதத்தினை அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்பும் வேளையில், மூன்றாவது வரிசையில் களமிறங்கும் விராட் கோலி இடத்தை நிரப்ப போவது யார் என்ற பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டாவது போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடிய ருத்ராஜ் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப ருத்ராஜ் வந்துவிட்டார் என்ற பேச்சுக்கள் தற்போது எழுந்து வரும் நிலையில் இது குறித்து ருதுராஜ் கூறும் பொழுது ” இது உண்மையில் மிகப்பெரிய செய்தியாக இருக்கும். அவர் போன்ற ஒரு லெஜெண்ட் வீரரின் இடத்தை நிரப்புவது சாதாரண விஷயம் இல்லை. இந்த ஒப்பீடு முற்றிலும் தவறானது. இதே போலத்தான் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவதும்.

- Advertisement -

நீங்கள் இப்போதுதான் உங்கள் சொந்த வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கான இடத்தில் விளையாட ஆரம்பிக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் இது போன்ற ஒப்பீடுகள் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். நான் ஐபிஎல் தொடருக்கும் இதே தான் சொல்கிறேன்.

இதையும் படிங்க:நானும் தான் அவரை திட்டினேன்.. ஆனா அதை தாண்டி இப்போ ஜெயிச்சிருக்காரு- இர்பான் பதான் புகழாரம்

அணி நிர்வாகம் நான் எங்கு களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அங்கே இறங்கி என்னால் முடிந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். தொடக்க இடத்திற்கும் மூன்றாவது இடத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மூன்றாவது இடத்திலும் பெரும்பாலும் புதிய பதில் தான் விளையாடும் சூழ்நிலை உருவாகும்” என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மகேந்திர சிங் டோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய நிலையில் ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணி இந்தத் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles