என்னால முடியல என்பதுதான் உண்மை.. நான் சிறப்பா இல்ல.. ஆனா அதுக்கு மாறிக்கிட்டு இருக்கேன் – விராட் கோலி பேச்சு

நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 35 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். மேலும் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி ஆரஞ்சு தொப்பியையும் வென்றார்.

- Advertisement -

கடந்த இரண்டு போட்டிகளாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக ஒரு பக்கத்தில் சால்ட் அதிரடியாக விளையாட விராட் கோலி பொறுமையாக விளையாடியதும் விமர்சனமானது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் போது ” நான் கடந்த போட்டியில் உடல் நலம் இல்லாமல் இருந்தேன். மேலும் முழங்காலில் வலி இருந்தது. இப்போது உடல்நிலை பரவாயில்லை ஆனால் முழங்காலில் கொஞ்சம் வலி இருக்கவே செய்கிறது. நான் இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை”

- Advertisement -

“அதே சமயத்தில் கிரிக்கெட் மிகவும் வேகமாக மாறி வருகிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். அதற்கேற்ற வகையில் அதிரடியாக விளையாடுவதற்கு என்னை நான் தயார் செய்து கொண்டிருக்கிறேன். இந்த போட்டியில் என்னுடைய இன்டெண்ட் ஆரம்பத்தில் சரியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles