நேற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணி வலிமையான ஆர்சிபி அணியை வென்றது. இதில் பவர் பிளேவில் குஜராத் கேப்டன் கில் 18 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். இவரது பேட்டிங் பற்றி வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார்.
இந்த போட்டியில் குறிப்பாக கில் ஆட்டத்தின் ஹேசில்வுட் வீசிய இரண்டாவது ஓவரின் மொத்தம் 24 ரன்கள் குவித்தார். அதற்கு அவர் சில புத்திசாலித்தனமான கால் நகர்வுகளை செய்து ரன் அடித்தார்.
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது “ஹேசில்வுட் நல்ல லென்த்தில் பந்தை வீசுவார் என்று கில்லுக்கு தெரியும். எனவே அவர் கொஞ்சம் நகர்ந்து முன்னே வந்து லென்த்தை மாற்றி அடித்தார். பிறகு மேலே நின்று காத்திருந்து அடித்தார்”
“யோசித்துப் பாருங்கள் இதையெல்லாம் விராட் கோலி செய்வார் தானே! இதைத்தான் நேற்று கில் செய்தார். விராட் கோலியிடமிருந்து அவர் இதை எல்லாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

