இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது டி20 போட்டி கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 235 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் இழந்து இருக்கிறது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் பவர் பிளே ஓவர்களிலேயே அரை சதம் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 25 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய இஷான் கிஷான் முதல் டி20 போலவே இந்த டி20 போட்டியிலும் அதிரடியாக விளையாடி மீண்டும் ஒரு அரை சதம் எடுத்தார். இவருக்கு பக்க பலமாக மறுமுனையில் நிதானத்துடன் விளையாட்டினார் ருத்ராஜ். அதிரடியாக விளையாடிய இஷான் 32 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் எடுத்து 52 ரன்களில் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பினிஷர் ரிங்கு சிங் களம் இறங்கினார். இவரது சிறப்பான அதிரடியில் இந்தியா 20 ஓவர்களில் 235 ரன்கள் எட்டியது.
ஆஸ்திரேலியா அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் அதிரடி தாக்குதல் நடத்திய இவர் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 25 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஒரு கட்டத்தில் இந்தியா 220 ரன்கள் எடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ரிங்கு சிங் தனது அபார ஆட்டத்தால் இந்தியா 235 ரன்கள் எடுக்க உதவினார்.
Rinku Singh providing the finishing touch once again 😎
— BCCI (@BCCI) November 26, 2023
25 runs off the penultimate over as 200 comes 🆙 for #TeamIndia 👌👌#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/hA92F2zy3W
இறுதி ஓவரில் களமிறங்கிய திலக் வர்மா தனது பங்கிற்கு இரண்டு பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் வெறும் 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 344.44 ஆகும். தோனியை போலவே இறுதிக்கட்டத்தில் களமிறங்கி இவர் காட்டிய சூறாவளி ஆட்டம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. இவரது அதிரடி ஆட்டத்தின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

