நான் சீக்கிரமா அவுட் ஆயிட்டேன் வருத்தமா இருக்கு.. ஆர்சிபிக்கு கதையை வேற மாதிரி மாத்தி இருப்பேன் – சூரியவன்சி வருத்தம்

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி 26 பந்தில் 78 ரன்கள் எடுத்தார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பவுலர்களை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் ஆட்டமிழந்து வெளியேறும் போது மிகவும் ஏமாற்றத்துடன் செல்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது ” நான் இன்னும் கொஞ்ச நேரம் நின்று விளையாடினால் என்னுடைய அணியை இரண்டு மூன்று நபர்களுக்கு முன்பாக வெற்றி பெற வைக்க முடியும். இதுவே முதலில் பேட்டிங் செய்வதாக இருந்தால் கூடுதலாக ஒரு இருபது ரன்கள் எடுத்துக் கொடுக்க முடியும் “

- Advertisement -

“எனவே நான் இன்னும் கொஞ்ச நேரம் நின்று விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் நான் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்து விட்டதாக உணரும் போது நான் மிகவும் ஏமாற்றத்துடன் வெளியே செல்கிறேன். இதுதான் என்னுடைய சோகத்திற்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles