நம்பவே முடியல.. இந்தியா பன்ற.. அந்த விஷயத்தை.. உலகக்கோப்பை பைனல் முன்பாக ஆஸி வீரர் டிராவஸ் ஹெட் பேட்டி.!

13-வது உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவில் வைத்து மோதின. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. எனினும் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சில் சவுத் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட் இழந்தது.

- Advertisement -

அந்த அணியின் கேப்டன் பவுமா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற குயின்டன் டிகாக் 3 ரன்னிலும் ரசி வாண்டர் டுசன் ஆறு மற்றும் மார்க்ரம் 10 இரண்டிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அந்த அணி 200 ரன்களை கடக்க உதவினார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 116 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் விக்கெட்டுகள் வீழ்த்தினர்.213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அதிரடியாக தொடங்கினாலும் இறுதியில் ஏழு விக்கெட் இழந்து வெற்றி நேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் டிராவஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்கள் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் 62 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இதனால் ஆஸ்திரேலியா 47.2 ஓவர்களில் 2015 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் 62 ரன்கள் எடுத்ததோடு இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்றதற்குப் பின் பேசிய அவர் ” இது ஒரு டென்ஷனான போட்டி. கடைசி வரை பரபரப்பாக இருந்தது. அருமையான விளையாட்டு. நான் ஆட்டம் இழந்த பிறகு உட்கார்ந்த இடத்திலிருந்து எழும்பாமல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த ஆடுகளம் திரும்பும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் இங்கு பயிற்சி மேற்கொண்ட மூன்று அல்லது நான்கு நாட்களில் இதுபோன்ற ஸ்பின் பார்த்ததில்லை.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க தொடரின் போது எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. அப்போது இந்த உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி. ஹென்றிக் கிளாஸன் என்னுடைய பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அதனால் அவரது விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி. திரும்பாமல் நேராகச் செல்லும் பந்தை வீசினேன். அவர் கிளீன் போல்ட் ஆகிவிட்டார். பந்துவீச்சின் மூலமும் அணிக்கு எப்போதும் எனது பங்களிப்பை தொடர விரும்புகிறேன்.

எப்போதும் பாசிட்டிவ் மனநிலையுடன் ஆட்டத்தை அணுக விரும்புகிறேன். இன்று ஆட்டம் இழந்த விதம் எனக்கு சிறிது ஏமாற்றத்தை கொடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியுடன் உலகக்கோப்பை பைனலில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. மேலும் அவர்களது பௌலிங் அட்டாக் நம்ப முடியாத வகையில் அசுர பலத்துடன் இருக்கிறது ..ஆனால் இப்போது அது நடக்க இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles