இந்தியாவில் நடைபெறும் மிக முக்கிய பிரான்சிஸ் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் சிஎஸ்கேவில் இணைய உள்ளதாக கருத்துக்கள் பரவி வருகிறது.
டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 2018ஆம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஆறு வருடங்களாக டெல்லி அணியின் பயிற்சியாளராக விளங்கினார். இந்த சூழ்நிலையில் அவர் தாமாக பயிற்சியாளர் பதவியை விட்டு விலகவில்லை எனவும், டெல்லி கேப்பிடல் அணியின் வற்புறுத்தலின் பேரிலேயே விலகி இருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் ஆலோசகராக விளங்கிய கங்குலி ஆறு வருடங்களாக பாண்டிங்கால் டெல்லி அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் பாண்டிங் மட்டும் இல்லாமல் ரிஷப் பன்ட்டிற்கும் டெல்லி அணிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது அவ்வளவு எளிதில் சாத்தியம் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் அடுத்து மெகா ஆக்சன் நடைபெற உள்ளதால் ஐபிஎல் அணிகள் குறிப்பிட்ட வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களையும் வெளியே விட்டு அதற்குப் பிறகு ஏலத்தில் வாங்கும்.
ரிஷப் பண்ட்டை ஒருவேளை டெல்லி அணி வெளியே விட்டால் நிச்சயமாக அவர் ஒரு பெரிய தொகைக்கு ஏலத்தில் செல்வார். அப்படி பார்க்கும் போது சென்னை அணியில் ஏற்கனவே மூன்று அல்லது நான்கு வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள். இதனால் ரிஷப் பண்ட்டை வாங்கும் அளவிற்கு சென்னை அணியிடம் போதிய அளவு பணம் உள்ளதா? அல்லது அவரை வாங்கும் பட்சத்தில் மற்ற அனைத்து துறைகளுக்கும் சரியான வீரர்கள் நிரம்புவார்களா? என்பது கேள்விக்குறியே ஆகும்.
இதனால் பண்ட் சென்னை அணியில் இணைவார் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. டெல்லி நிர்வாகமும் இப்படி ஒரு தரமான வீரரை அவ்வளவு எளிதாக வெளியே விடாது. ஏனென்றால் இந்தியாவின் தரமான வீரர்களில் ஒருவரான பண்ட் தற்போது டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க:கையால எழுதி தாங்க.. அப்பதான் நம்புவோம்.. பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கிடுக்குப்பிடி
அப்படி அவர் சென்னை அணிக்கு வந்தாலுமே ஒரு வீரராக மட்டுமே செயல்பட முடியுமே தவிர கேப்டனாக செயல்பட முடியாது. ஏனென்றால் தற்போது சென்னை அணியில் கேட்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ருத்ராஜ் குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது சென்னை எனில் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.

