மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை இந்திய கிரிக்கெட் வாரியத்தை சற்று அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு ஆசிய கோப்பையில் விளையாடியது. அதற்குப் பிறகு இருதரப்பு தொடருக்காக கூட இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. கடைசியாக 2023ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆசிய கோப்பையில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் ஹைபிரிட் மாடலை பயன்படுத்தி விளையாடியது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி வருகிற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடத்த உள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்த போதிலும், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்று பிசிபி கூறி இருக்கிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தரப்பில் இருந்து கூறும் பொழுது “இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு அனுமதி மறுத்தால் அதன் அறிக்கையை எழுத்துப்பூர்வமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ வழங்குவது கட்டாயமாகும். பிசிசிஐ பாகிஸ்தான் செல்வதற்கான பயணத் திட்டங்கள் பற்றி விரிவான அறிக்கையை ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று கூறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகியவை லாகூரில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இறுதி அட்டவணையை பிசிபி ஏற்கனவே ஐசிசிக்கு அனுப்பியுள்ளது. இதில் இந்தியா விளையாட உள்ள அனைத்து ஆட்டங்களும் அடங்கும். இதில் குறிப்பிடத்தக்க போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியானது பிப்ரவரி 19ஆம் தேதி கராச்சியில் தொடங்கி மார்ச் ஒன்பதாம் தேதி லாகூரில் இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது.
இதையும் படிங்க:எல்லாப் புகழும் அவருக்குத்தான்.. இந்த மாதிரி ஒரு கம்பேக் கொடுத்து நான் யாரையுமே பார்க்கல-மாம்ப்ரே பேட்டி
இறுதிப்போட்டியில் ஏதேனும் மோசமான வானிலை ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் நடைபெறும். இந்த சூழ்நிலையில் பிசிசிஐ தெரிவித்துள்ள தகவலின் படி “இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல விளையாட வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானில் இருந்து வெளியே போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது”.

