தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருவதோடு விராட் கோலியின் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் . இதுவரை நடைபெற்று இருக்கும் எட்டு போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 543 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 49 ஆவது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி. இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் அவர் . இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என வளரும் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்
நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவில் வைத்து இந்த சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. அந்தப் போட்டியில் இந்திய அணியும் 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவில் வீழ்த்தியது. அதற்கு மறுநாள் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருந்தது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் விராட் கோலி இன்று சாதனை செய்திருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்களா என கேட்டார். இது தொடர்பாக பதில் அளித்த வெண்டிஸ் அவருக்கு ஏன் நான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இது கிரிக்கெட் வட்டாரங்களிலும் கிரிக்கெட் ரசிகர்களிடமும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இலங்கை அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறி நாடு திரும்பி இருக்கும் நிலையில் அந்த சர்ச்சைக்குரிய பேட்டி பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் மெண்டிஸ். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர் அப்போது விராட் கோலி என்ன சாதனை புரிந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான் என் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து விளக்கமாக பேசியிருக்கும் அவர் ” அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது விராட் கோலி தனது 49 வது சதத்தை எடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் அந்தப் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியும் எனக்கு சரியாக புரியவில்லை. அப்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை அதன் காரணமாகத்தான் நான் ஏன் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன்..
கிரிக்கெட் போட்டிகளில் சதம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. விராட் கோலியின் சாதனை மகத்தானது. அன்று நான் சொன்ன கருத்துமுற்றிலும் தவறான ஒன்று. அதை நினைத்து தற்போது வருத்தப்படுகிறேன். என ஏசியன் மிரர் என்ற பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்திருக்கிறார் மெண்டிஸ்.

