2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக இந்தியா அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இது இந்த வருட உலகக்கோப்பை தொடரில் அவர் பெரும் இரண்டாவது ஆட்டநாயகன் விருதாகும். அவர் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி ஆறு போட்டிகளில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரிலும் மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.
மேலும் இன்று சாதனையை 14 போட்டிகளில் நிகழ்த்தி இருப்பதோடு ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் முகமது சமி. மேலும் உலகக் கோப்பை போட்டி தொடர்களில் ஐந்து முறை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க்குடன் பகிர்ந்து இருக்கிறார் முஹம்மது ஷமி. இரண்டு வீரர்களும் மூன்று முறை ஐந்து விக்கெட் களுக்கு மேல் உலக கோப்பையில் வீழ்த்தி இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய முஹம்மது ஷமி” முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களின் ரிதம் நன்றாக இருக்கிறது. பந்துவீச்சு கூட்டணியாக நாங்கள் ஒவ்வொரு போட்டிக்காக உழைக்கும் எங்களது கடின உழைப்பின் வெளிப்பாடுதான் நீங்கள் ஆடுகளத்தில் பார்க்கும் இந்த புயல் வேக தாக்குதல்கள். இது போன்ற பந்துவீச்சை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது. நாங்கள் வந்து வீச்சு கூட்டணியாக இதை ரசித்து செய்கிறோம். எங்களது ரிதம் நன்றாக இருக்கிறது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒருமுறை இடம் பந்துவீச்சின் கட்டுக்கோப்பை தவறவிட்டால் அதை மீண்டும் திரும்ப பெறுவது கடினமான சவாலாக மாறிவிடும்” என்று தெரிவித்தார்
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இதனால் அந்த கட்டுக்கோப்புடனே தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சரியான லென்த்தில் பந்துவீசி என்னுடைய ரிதத்தை ஆரம்பத்திலேயே பிடிக்க நினைக்கிறேன். சரியான அளவில் பந்து வீசும் போது ஆடுகளத்தில் இருந்து சிறு உதவி கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி எதிரணியின் விக்கெட்களை வீழ்த்த உதவுகிறது. உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவிற்காக அதிக விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி. என்னுடைய சிறப்பான ஆட்டத்தை எனது நாட்டிற்காக கொடுக்க ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியின் துவக்கத்திலும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் இந்த மாதிரியான லென்த் இந்த ஆடுகளத்திற்கு சரியாக இருக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கு ஏற்றார் போல முடிவுகளும் கிடைக்கின்றன. இது போன்ற நல்ல முடிவுகள் கிடைக்கும்போது அதையே திரும்ப முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.? இது எளிதான காரியம் இல்லை என்றாலும் உங்களுடைய ரிதம் மற்றும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்பதில் இருக்கும் தெளிவு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவசியம்” என்று கூறினார்.
பந்துவீச்சை பொறுத்தவரை ரிதம் ஒரு பந்துவீச்சாளருக்கு முக்கியமான ஒன்று. இதில் பெரிய ராக்கெட் சயின்ஸ் எதுவும் இல்லை . நல்ல உணவு சலனம் இல்லாத மனம் மக்களின் அன்பு இதுதான் எல்லா வெற்றிகளுக்கும் காரணம். ஒவ்வொரு போட்டிகளின் போதும் இந்திய மக்களின் அன்பு மிகவும் முக்கியமான ஒன்று. அவர்கள் எங்களை அதிகம் நேசிக்கிறார்கள். இது எங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. நாங்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போதும் இந்திய ரசிகர்கள் பெருமளவில் அன்பை கொடுக்கிறார்கள். அதனால் இந்தியாவிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்க சிறப்பாக செயல்படுகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் ஆட்டநாயகன் முஹம்மது ஷமி.

