58 பந்து 167ரன்.. இந்த ஆட்டம் போதுமா குழந்தை?.. லக்னோவை ஊதித் தள்ளிய சன்ரைசர்ஸ்.. மீண்டும் சிஎஸ்கேவுக்கு ஆப்பு

நேற்று நடைபெற்ற லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 177 ரன்கள் குவித்து அபார சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணியின் சொந்த மைதானமான ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டீ காக் ஆகியோர் களம் இறங்கினர். டீ காக் இரண்டு ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து லக்னோ அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்டானிஷ் ஐந்து பந்துகளில் மூன்று ரன்கள் குவித்து வெளியேறினார்

- Advertisement -

அவரைத் தொடர்ந்து கேப்டன் கே எல் ராகுலுடன் க்ருணால் பாண்டியா பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் லக்னோ அணியின் ஸ்கோர் உயர சிறிது நேரம் உதவினர். பாண்டியா 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அணியின் கேப்டன் கே எல் ராகுல் இந்த போட்டியில் மிகவும் நிதானமாகவே விளையாடினார் என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

33 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 29 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். இதனால் மிகவும் மந்தமாக சென்ற லக்னோ அணியின் ஆட்டத்தை பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி கூட்டணி ஓரளவு சுவாரசியப்படுத்தியது. பூரான் 26 பந்துகளில் 6 பவுண்டரி,1 சிக்ஸர் என 48 ரன்களும், பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 55 ரன்களும் குவித்தனர்.

இதனால் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வரகுமார் நான்கு ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன் ரைஸர்ஸ் அணி களமிறங்கியது.

- Advertisement -

லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிந்த ஆடுகளம் சன்ரைசர்ஸ் பேட்டிங் செய்தபோது பேட்டிங் ஆடுகளமாகவே மாறிவிட்டது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் கூட்டணி லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை பாரபட்சமின்றி சிதைத்தனர். எந்த திசையில் பந்து வீசினாலும் அந்த திசையை நோக்கியே பௌண்டரியும், சிக்ஸர்களாக விலாசினர்.

இதையும் படிங்க:இவங்க 2 பேர்.. கோலி, ரோஹித் விட அதிகமா டி20 உலகக்கோப்பைல பெர்ஃபார்ம் பண்ண போறாங்க.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்

தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 75 ரன்கள் குவித்தார் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், எட்டு சிக்சர்கள் என 89 ரன்கள் குவித்தார். இந்தக் கூட்டணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தது. வெறும் 58 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 167 ரன்கள் குவித்து மெகா வெற்றியை படைத்திருக்கிறது சன்ரைஸர்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மீண்டும் நான்காவது இடத்திற்கு கீழே தள்ளி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles