சிஎஸ்கே தோல்விக்கு நான் காரணமா?.. நான் ஐபிஎல்க்கு சும்மா வரல.. இவ்வளவு உழைச்சிருக்கேன் – பிளமிங் பேச்சு

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இன்று டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே தனது நான்காவது போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பான மூன்று போட்டிகளையும் சிஎஸ்கே அணி தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறும்போது “நாங்கள் நிறைய வீரர்களை அணியில் மாற்றி இருப்பது சவாலானது. நாங்கள் நம்பிக்கை பெறுவதற்கு வெற்றி தேவைப்படுகிறது. வெற்றிக்கு தொலைவில் நாங்கள் இல்லை. இது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. நாங்கள் நல்ல முறையில் உழைத்து வருகிறோம்”

- Advertisement -

“ஐபிஎல் தொடருக்கு நான் எந்த திட்டமும் இல்லாமல் வரவில்லை. வெளியில் இரண்டு லீக்குகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறேன். அங்கும் ஏலத்திற்கு செல்கிறேன். இதன் காரணமாக உலகெங்கும் இருக்கும் வீரர்கள் பற்றி படிக்கிறேன். அது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கும் உதவியாகத்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles