தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஹேமங் பதானி சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் குறித்து முன்பு விமர்சனம் செய்திருந்தார். தற்போது இது குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று டெல்லி அணி ஆர்சிபி அணியிடம் சிக்கி 75 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பயிற்சியாளர் பதானி முடிவுகள் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் வெற்றிகரமான கோச் என யாராவது சொன்னால் தான் ஏற்க மாட்டேன், அவர் தோனி உடன் இருப்பதால் மட்டுமே வெற்றி பெறுகிறார் என்று பதானி கூறியிருந்தார்.
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி உள்ள ஸ்ரீகாந்த் கூறும் போது “ஏய் பதானி நீ பிளமிங் பற்றி பேச என்ன அடிப்படை இருக்கிறது? நீ முதலில் பயிற்சியாளர் பொறுப்பில் என்ன சாதித்து விட்டாய்? தோனியால் அவர் வெற்றி பெறுகிறார் என பேசுவது தவறானது. வாழ்க்கையில் அதிகம் பேசக்கூடாது. நீ நிறைய பேசி விட்டாய். இப்போது அதற்கு வரும் எதிர் வினையை அனுபவி” என்று கூறி இருக்கிறார்.

