இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது. அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியை மட்டும் வென்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “நீங்கள் தீபக் மற்றும் ஷர்துல் இருவரையும் ஒரே அணியில் வைத்து விளையாடவே கூடாது. அப்படி விளையாடினால் ஆரம்பத்திலேயே அவர்கள் போட்டியை முடித்து விடுவார்கள். ஷர் துல் பவர் பிளேவில் ஒரு ஓவர் வீச வருவார். அப்படி ஹர்திக் பாண்டியா அவரிடம் கொடுத்தால் அதே ஓவரில் 20 முதல் 30 ரன்கள் அவர் தருவார். அங்கேயே போட்டி முடிந்து விடும்”
“இத்துடன் போல்டை நீக்கிவிட்டு அஸ்வினி குமாரை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ரோஹித் சர்மா இடத்திற்கு குயிண்டன் விளையாடலாம். அடுத்தடுத்த இடங்களில் நமன், சூர்யா, ஹர்திக், ரூதர்போடு, திலக் என இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

