தோனிக்கு பதில் ரிஷப் பண்ட் சிஎஸ்கே போறாரா.?.. டெல்லி கேப்பிட்டல்ஸ் டைரக்டர் கங்குலி விளக்கம்.. குழப்பங்களுக்கு கிடைத்த விடை

2025 ஆம் வருட ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக மிகப்பெரிய ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வருடங்களுக்கு இடையே மினி ஏலம் நடைபெறும். அதன் அடிப்படையில் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக மிகப்பெரிய ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகம் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 அணியின் உரிமையாளர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியது. இதில் பெரும்பாலான அணியின் உரிமையாளர்கள் மெகா ஏலத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெரும்பான்மையான அணியின் உரிமையாளர்கள் 4 முதல் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலக இருப்பதாகவும் 2025 ஆம் வருட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணிக்கு நீண்ட நாட்களாக தலைமையேற்று வழி நடத்திய எம்.எஸ் தோனி வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா.? என்பதில் சந்தேகம் தொடர்ந்து நிலவி வருகிறது.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடிய தோனி தனது கேப்டன் பொறுப்பை ருத்ராஜ் கெயிக்வாட்டிற்கு வழங்கினார். மேலும் 2025-ல் நடைபெற இருக்கின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக மெகா ஏலத்திற்கு முன் முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கியது. இதனால் சிஎஸ்கே நிர்வாகம் ரிஷப் பண்டை, தோனிக்கு மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

2022 ஆம் வருட இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 16 மாத கால ஓய்விற்குப் பிறகு 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக களம் இறங்கினார். இந்தத் தொடரில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டதோடு அணியையும் திறம்பட வழி நடத்தினார். எனினும் டெல்லி அணி குவாலிபயர் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை. மேலும் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் டெல்லி அணியின் நிர்வாகம் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை கிரிக்கெட் இயக்குனராக பணியாற்றி வரும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அனைத்து விதமான குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” ரிஷப் பண்ட் தொடர்ந்து டெல்லி அணியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.

ஒன் இந்தியா பெங்காளி பத்திரிக்கைக்கு பேட்டியளித்த கங்குலி வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு விளையாடுவார் என்பதை உறுதி செய்தார். மேலும் டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த தகவலையும் கங்குலி வெளியிட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விடுவிக்கப்படுவதாக டெல்லி அணியின் நிர்வாகம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் சௌரவ் கங்குலி டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகிப்பார் என பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து பேசிய கங்குலி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். மேலும் தலைமை பயிற்சியாளர் பதவியை தான் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles