தற்போது ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக கலக்கி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இளம் வீரர் சூரியவன்சி குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் வைபவ் சூரியவன் சி இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய டி20 அணிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படுவதோடு கேப்டனாகவும் மாற்றப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது இளம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்களது திறமையை வெளியே கொண்டு வருவதில் சிறந்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் 15 வயதான வீரரை பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது “வைபவ் சூரியவன்சி மிகவும் அற்புதமான திறமை கொண்டவர். அவர் குறித்து பாராட்டுவதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை. மேலும் பந்து வீசப்படுவதற்கு முன்பாக அவர் களத்தில் கொண்டு வரக்கூடிய ரிதம் மற்றும் எனர்ஜி இவற்றைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக இந்த பையன் எதிர்காலத்திற்கான ஆள் என்று தெரிகிறது” எனக் கூறி இருக்கிறார்.

