நான் யாரையும் ஃபாலோ பண்ணல.. என் கேப்டன்சி இப்படித்தான்.. என் பசங்க கிட்ட இதுதான் பேசுறேன் – ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி இதுவரை தோல்வி அடையாத அணியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய கேப்டன்சி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் நேற்று பஞ்சாப் இளம் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் கூப்பர் காணலி இருவரின் அதிரடியில் பஞ்சாப் அணி 254 ரன்கள் குவித்தது. மேலும் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “இந்த வீரர்கள் ஆடிய ஷாட்டுகளை என்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு பிரமாதமாக இருந்தது. வேகப்பந்துவீச்சாளர்களை பேக் புட்டில் இருந்து அடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அது சில நேரத்தில் நம் விக்கெட்டை எடுத்து விடும். ஆனால் இவர்கள் மிகவும் எளிதாக அடித்தார்கள்”

- Advertisement -

“வீரர்களை நீங்கள் சுதந்திரமாக விட்டால் தான் அவர்கள் திறமையோடு வந்து விளையாட முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பாணியும் வழிமுறையும் இருக்கிறது. எனவே நீங்கள் அவர்களை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். நானும் ரிக்கியும் வீரர்களிடம் அதிகம் பேச மாட்டோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles