நேற்று பஞ்சாப் அணி 222 ரன்கள் முதலில் பேட்டிங் செய்து எடுத்தோம் ராஜஸ்தான் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து விட்டது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் மிடில் ஓவர்களில் பஞ்சாப் விளையாடும் பொழுது கொஞ்சம் ஆடுகளம் கடினமாக இருப்பது போல் தெரிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 30 ரன் மட்டுமே எடுத்தார். ஆனால் ராஜஸ்தான் விளையாடும்போது மிகவும் எளிதாக தெரிந்தது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது ” நாங்கள் இந்த ஆடுகளத்திற்கு எடுத்த ரன்கள் மிகவும் சரியானது. ஆடுகளத்தில் பந்து மெதுவாகவும் நின்றும் வந்தது. ஆனால் பந்து வீச்சில் எங்கள் பௌலர்கள் எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. தோல்விக்கு இதுதான் காரணம்”
“உடலும் சோர்வாக இருந்தது. ஆனால் இது தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது. முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் அளவுக்கு வடிவம் மாறிவிட்டால் கூட, பவுலர்கள் தங்கள் திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை பொருத்து தான் எல்லாம் அமையும்” என்று கூறியிருக்கிறார்

