ஐபிஎல் தொடரில் தோனி விஷயத்தில் சிஎஸ்கே உரிமையாளர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் தோனி கீழ் வரிசையில் வந்து குறைந்த பந்துகள் விளையாடுவதை பார்ப்பதற்கு சிரிப்பாகவும், அதே நேரத்தில் அப்படிப்பட்டதை மீடியாக்கள் மிகவும் புகழ்ந்து பேசுவதாகவும் அதிரடியாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது “தோனியால் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே அவர் கீழ் வரிசையில் வந்து மூன்று அல்லது நான்கு பந்துகளை மட்டுமே விளையாடியதை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் அதைக் கூட மீடியாக்கள் என்ன மாதிரியான ஒரு ஆட்டம் என்று புகழ்ந்தார்கள்”
“தோனி தொடர்ந்து விளையாடுவாரா கேப்டனாக இருப்பாரா என்பது போன்ற விஷயங்களில் சிஎஸ்கே உரிமையாளர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் அடிமைத்தன புகழ்ச்சி இப்படியாக கிரிக்கெட்டிலும் நுழைந்தது. தோனியை சுற்றி மிகைத்தனமான புகழ்ச்சி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

