சொன்னா கேளுங்க.. சிவம் துபேவை தூக்கிடுங்க.. இந்த அதிரடி வீரரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு சல்மான் பட் அட்வைஸ்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி சமணில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்படாதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபேவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அதிரடி வீரர் சூரியகுமார் யாதவை ஒரு நாள் போட்டி அணியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கும் சல்மான் பட் “இந்தியா ஒரு நாள் போட்டி தொடருக்கான அணியில் சூரியகுமார் யாதவை ஏன் எடுக்கவில்லை.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் இந்திய அணி சுழற் பந்து வீச்சுக்கு எதிரான தங்களது யூகத்தை மீண்டும் ஆலோசிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி இருக்கிறார். டி20 போட்டிகளில் இடம் பெற்றிருந்த சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெற்று இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் சூரியகுமார் யாதவ், சிவம் துபேவை விட பேட்டிங் மற்றும் பில்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என தெரிவித்தார். சிவம் துபே களத்தடுப்பில் மெதுவாக செயல்படுகிறார் என்பதை சுட்டிக்காட்டிய சல்மான் பட், சூரியகுமார் யாதவ் மிகச்சிறந்த ஃபில்டர்; மேலும் அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திறமையான பேட்ஸ்மேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2019 ஆம் வருடம் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் விளையாடிய சிவம் துபே தற்போது ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சூரியகுமார் யாதவ் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டும் என சல்மான் பட் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் எட்டாவது இடத்தில் பேட்டிங் விளையாட களமிறங்கிய சிவம் துபே 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது தொடர்பாக கிரிக்கெட் விமர்சகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்தது. சிவம் துபே முன்னதாக களமிறக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்காவது இடத்தில் களமிறங்கிய சிவம் துபே ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டிகளில் விளையாடாததால் அவருக்கு பதிலாக மித வேகப்பந்து வீச்சாளரான சிவம் துபே ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்ற துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் இறுதி போட்டியிலும் சிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்றார். இது போன்ற தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களால் அவருக்கு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles