ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படும் ஒரே டாபிக் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? பெறாதா? என்பதுதான்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐந்தாவது வெற்றியைப் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இவையெல்லாம் அந்த அணிக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்டர் சடகோபன் ரமேஷ் கூறியிருக்கிறார்.
ஐபிஎல்லில் முன்னணி அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. காரணம் அதற்கு முன்னதாக மகளிர் ஆர்சிபி அணி சேம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் தான் சந்தித்த முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.
அதற்குப் பிறகு ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று அதற்கடுத்து தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இனி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைமையில் வரிசையாக தற்போது நான்கு வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றி ரேசில் மற்ற அணிகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போதுதான் அந்த அணிக்கு பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துமே மிகவும் பக்காவாக செட் ஆகியிருக்கிறது. ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இவையெல்லாம் சாதகமாக நடக்க வேண்டும் என்று சடகோபன் ரமேஷ் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது
“ஆர்சிபி அணி இனி வரும் இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்று நெட்ரன் ரேட்டில் வலுவாக இருக்க வேண்டும். லக்னோ அணி இனிவரும் இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டி கண்டிப்பாக தோற்க வேண்டும்.
டெல்லி அணியும் ஆர்சிபி அணியுடன் தோற்க வேண்டும். அதற்கு அடுத்து எதிரியாக இருப்பது சிஎஸ்கே. சிஎஸ்கேவும் இனிவரும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் தோற்க வேண்டும். தற்போது நான்கு அணிகளுமே 14 புள்ளிகள் உடன் இருக்கும் பட்சத்தில் நெட்ரன் ரேட்டில் எந்த அணி முன்னிலை பெறுகிறதோ அந்த அணியே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதையும் படிங்க:காயத்துடன் போராடும் தோனி.. இன்றைய போட்டியில் களமிறங்குவாரா? மவுனம் கலைக்கும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்
இவை அனைத்தும் பெங்களூர் அணிக்கு சாதகமாக நடந்தால் மட்டுமே ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இது தான் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஊரே நாசமாக போக வேண்டும் என்ற நிலைமை தான் தற்போது ஆர்சிபி அணிக்கு உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

