17வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. தற்போது முன்னணி வீரர்களும் அணியில் இணைந்து தங்கள் பயிற்சியைத் துவங்க இருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல்லில் ராஜாவாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமாக கேப்டனாகத் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. 2008 ஆம் ஆண்டு சென்னை இனி இவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்தது. அன்று முதல் இன்று வரை சென்னை ரசிகர்களின் ஏகோபித்த அன்புக்கு சொந்தக்காரர் ஆனார் தோனி.
எம் எஸ் தோனியும் சென்னை அணிக்காக இதுவரை 5 பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். இடையில் இரு ஆண்டுகள் சில பிரச்சனைகளின் காரணமாக சென்னை அணியை சஸ்பெண்ட் செய்தது ஐபிஎல் நிர்வாகம். இதனால் மனமுடைந்த சென்னை ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தினை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக தெரிவித்தனர்.
அப்படி சென்னை ரசிகர்களுக்கும் தோனிக்கும் ஒரு மிக நெருங்கிய நெருக்கம் உண்டு. எனவே தற்போது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கலாம் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அவரது பிட்னஸ் பொறுத்தவரை இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆடலாம் என்றே தோன்றுகிறது.
ஆனால் முடிவு எம் எஸ் தோனி ஒருவரின் கையில் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தோனிக்குப் பிறகு சென்னை அணியை வழி நடத்தப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மும்பை அணிக்காக விளையாடிய வீரரும், சென்னை அணியில் விளையாடி ஓய்வு பெற்ற வீரருமான அம்பத்தி ராயுடு மும்பை இந்தியன்ஸ் வீரரான ரோகித் சர்மா சென்னை அணியின் கேப்டனாக வரவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்
“குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சற்று வித்தியாசமாக இருப்பதால் ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை அணியை வழிநடத்துவது சற்று வித்தியாசமானதாக இருக்கும். எனவே பாண்டியா ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் இன்னும் ஒரு வருடம் மும்பை அணிக்காக விளையாடி இருக்க வேண்டும்.
ரோகித் சர்மா அடுத்த ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு அவரால் ஐபிஎல் விளையாட முடியும். எனவே அவர் கேப்டனாக விரும்பினால் உலகத்தின் எந்த அணிக்கும் அவரால் கேப்டனாக செயல்பட முடியும். இதனால் 2025 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி ஓய்வு பெற்றால் ரோஹித் சர்மா சென்னை அணியின் கேப்டனாக தலைமை தாங்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

