டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியாக அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. முதல் பயிற்சி போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.
இந்த சூழ்நிலையில் மைதானங்களில் ரசிகர்கள் அத்துமீறி நுழைந்தால் அமெரிக்க காவல்துறையின் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எச்சரித்திருக்கிறார்.
பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது அப்போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் ரோஹித் சர்மா பேசுவதற்குள் மைதானத்திற்குள் 5 காவல்துறை வீரர்கள் உடனடியாக அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். ரசிகரது கைகளை பின்புறமாக மடக்கி காவல்துறையினர் விலங்கு மாட்டினார்கள்.
ரோகித் சர்மா அந்த ரசிகரை விடுவிக்குமாறு கூறியும் காவல்துறையினர் அதனை கண்டு கொள்ளவில்லை. பின்னர் அந்த ரசிகரை காவல்துறையினர் மைதானத்தை விட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அந்தக் காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்தது. இந்தியாவில் இதுபோல பல போட்டிகளில் ரசிகர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தாலும் இது போன்ற கடுமையான செயல்களில் காவல்துறையினர் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்காவில் சட்டதிட்டங்கள் அனைத்துமே கடுமையாக இருப்பதால் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்திய அணிக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உச்சகட்டமாக ஸ்னைப்பர் பாதுகாப்பு வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒருவேளை ரசிகர்கள் மைதானத்திற்குள் தகாத முறையில் செயல்பட்டால் அவர்களை சுட்டு தள்ளவும் கூட வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அயர்லாந்து அணியுடன் முதல் போட்டிக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா
“மைதானத்திற்குள் ரசிகர்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். மேலும் ரசிகர்களின் பாதுகாப்புகளும் முக்கியம். ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை நாம் அதிக வேண்டும்” என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார். மேலும் ரசிகர்கள் அத்துமீறி நுழைய வேண்டாம் எனவும் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:டிராவிட் சார்.. எங்களை விட்டு போகாதீங்க ப்ளீஸ்.. குறைந்தபட்சம் எங்களுக்காக இதையாவது பண்ணுங்க.. ரோகித் சர்மா உருக்கமான பேட்டி
இது வீரர்களின் பாதுகாப்பு கருதியும் மேலும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதியும் ரோஹித் சர்மா இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மேல் அவர் கொண்ட அக்கறையை காட்டுகிறது என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். உலகக் கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்கு பின்னர் வருகிற ஒன்பதாம் தேதி நியூயார்க் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

