டிராவிட் சார்.. எங்களை விட்டு போகாதீங்க ப்ளீஸ்.. குறைந்தபட்சம் எங்களுக்காக இதையாவது பண்ணுங்க.. ரோகித் சர்மா உருக்கமான பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அயர்லாந்து அணியோடு இன்று எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய அணியினர் மிகத் தீவிரமாக முதல் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

டி20 உலக கோப்பையோடு ராகுல் டிராவிட் பயிற்சி காலம் முடிவடைய உள்ளதால் அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட் ஒரு வீரராக எந்த உலகக் கோப்பையும் இதுவரை வென்றதில்லை.

- Advertisement -

ஆனால் பயிற்சியாளராக இந்திய அணியை அண்டர் 19 உலக கோப்பையை வெல்ல உதவி இருக்கிறார். இவரின் செயல்பாட்டின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். அதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, டி20 உலக கோப்பை அரை இறுதி வரை இந்திய அணியை முன்னேற்றி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சி காலம் முடிந்ததும் இந்திய அணியை விட்டு வெளியேற இருக்கிறார். தற்போது மீண்டும் நடக்க உள்ள பயிற்சியாளருக்கான நேர்காணலில் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டேன் எனவும் கூறி இருக்கிறார். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ராகுல் டிராவிட் எங்களை விட்டு செல்ல வேண்டாம் எனவும், குறைந்தபட்சம் ஒரு வடிவ கிரிக்கெட்டில் ஆவது அவர் பயிற்சியாளராக தொடங்க வேண்டும் எனவும் உருக்கமான வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது
“நான் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து என்னுடைய முதல் சர்வதேச கேப்டன் ராகுல் டிராவிட் தான். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடலே இவர்தான். இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட்டை சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன்.

- Advertisement -

என்னால் அவர் இந்திய அணியை விட்டுச் செல்வதை பார்க்க முடியவில்லை” என்று ரோஹித் சர்மா உருக்கமாக பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் டிராவிட் பதிலளிக்கும் விதமாக
“இந்திய அணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஆனால் இது மட்டுமல்லாமல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் மீண்டும் என்னால் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:என்னது.. பிஜேபி ஆட்சிக்கு வந்தா.. இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்காதா.? வரலாற்றை புரட்டும் ரசிகர்கள்

ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எதுவும் வெளிவராத நிலையில், இன்னும் சில தினங்களில் அது குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles