எங்கு ஆரம்பித்தேனோ அங்கேயே முடிக்கிறேன்.. இதை அறிவிக்க இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை- ரோஹித் பேட்டி

இந்த ஒரு நிகழ்வுக்காக கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் 11 வருடங்களாக காத்திருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதை வென்று காட்டி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

உலக கோப்பையை வென்ற கையோடு குறுகிய வடிவ தொடரான டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை விட்டு வெளியேறிய நிலையில், அதன் பிறகு முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பை ஏற்றார். ரோஹித் சர்மாவின் தலைமையிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பதிவு செய்தது. அனைத்து வெற்றிகளை பெற்ற போதிலும் ஒரே ஒரு குறையாக ஐசிசி தொடரை மட்டும் கைப்பற்றாமல் இருந்தது.

- Advertisement -

விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது அவரது தலைமையில் நீடித்த சோகம் ரோகித் சர்மாவின் தலைமையிலும் நீடித்தது. அவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இழந்த இந்திய அணி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் தோல்வியை தழுவியது.

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தோல்வி இந்திய அணியின் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அந்தப் போட்டி வரை முதல் பத்து ஓவர்களில் பொறுமையாகவும் அதற்குப் பிறகு அடுத்த 10 ஓவர்களில் அதிரடியாகவும் விளையாடிய இந்திய அணி பின்னர் 20 ஓவர்களிலும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. விளைவு இந்த டி20 உலக கோப்பையிலும் அதே அதிரடியை பின் தொடர்ந்த இந்திய அணி தற்போது சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார். இது குறித்து ரோஹித் சர்மா விரிவாக கூறும்பொழுது “இது ஒரு சிறப்பான தருணமாக எனக்கு அமைந்திருக்கிறது. நான் இந்தியாவிற்காக டி20 கிரிக்கெட்டில் தான் அறிமுகமானேன். எந்த டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானேனோ அதே டி20 கிரிக்கெட் தொடரோடு தற்போது தனது ஓய்வையும் அறிவிக்கிறேன்.நான் இப்படி ஒரு முடிவை எடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

எனது ஓய்வை அறிவிக்க இதைவிட சிறந்த தருணம் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. டி20 தொடரில் இருந்து மட்டுமே நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன். இந்த உலகக் கோப்பை டிராவிட்டுக்கு மிகவும் முக்கியமானது. அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணியினருக்கும் குறிப்பாக எனக்குமே மிக முக்கியமானது.

ராகுல் டிராவிட் மிகவும் தகுதியான நபர். அவரது சாதனை மகுடத்தில் இந்த ஒன்று மட்டுமே எஞ்சி இருந்தது. தற்போது அதுவும் வந்து சேர்ந்துள்ளது” என்று கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் இருந்து டி20 ஃபார்மெட்டில் ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க:நாங்கள் தோற்றே இருந்தாலும் இப்படி ஒரு முடிவைத்தான் நான் எடுத்திருப்பேன்.. ரோஹித் இதற்கு மிகவும் தகுதியானவர் – கோலி பேட்டி

ஏற்கனவே விராட் கோலி தனது ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ரோகித் சர்மாவும் அறிவித்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு உலகக்கோப்பையை வென்ற போதிலும் இது ஒரு சோகமான செய்தியாகவே உள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான இரண்டு வீரர்களை பெறுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. இந்திய கிரிக்கெட் சாதனை மகுடத்தில் இந்த இரண்டு வீரர்களுக்கான இடம் என்பது எப்போதும் அழிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles