நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் சூரியவன்சி மிகப்பெரிய கூட்டத்தை இருக்கக்கூடிய வீரராக மாறி இருக்கிறார். ஆனால் அவர் இன்னும் ஒரு குழந்தை என்பதை மறக்கக்கூடாது என ரியான் பராக் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் உலகில் தலை சிறந்த பந்துவீச்சாளர்களை வைபவ் சூர்யவன்சி மிகவும் சாதாரணமாக அடித்து நொறுக்கி ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். நேற்றும் ஆர்சிபி அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.
இவர் குறித்து கேப்டன் ரியான் பராக் பேசும் போது ” எங்கள் எல்லோருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். எல்லோருடனும் இருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் இப்போதும் ஒரு குழந்தைதான். அவனுக்கு இப்பொழுது 15 வயதுதான் ஆகிறது என்பதை மறக்கக்கூடாது”
“ஒரு குழந்தையாக அவனுக்கு எல்லோருடனும் இருப்பது, மேலும் வெளியில் சென்று சாப்பிடுவது, பேட்டிங் செய்வது என்பதெல்லாம் மிகவும் பிடித்த விஷயங்கள். அவனுக்கு பிடித்த விஷயங்களை நாங்கள் தவறாமல் கொடுப்பதை உறுதி செய்கிறோம். இதே வழியில் செல்லும் பொழுது அவள் மிகப்பெரிய வீரனாக வருவான் என்று கூறியிருக்கிறார்.

