வாய்ப்பே கொடுக்கவில்லை.. என்னை எதுக்கு தேர்வு செய்தாங்க.. பயிற்சியாளர் கம்பீர் மீது கடுப்பான ரிஷப் பண்ட்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை நாளை வங்கதேச அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாடுகிறது.

- Advertisement -

இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை கிட்டத்தட்ட உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் 5 ஸ்பின்னர்கள் இருப்பதால், இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல்

- Advertisement -

ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் சிறந்த ஆல்ரவுண்டர்கள் என்பதால், அவர்களின் இடம் நிச்சயமானது. குல்தீப் யாதவ் மிகச்சிறந்த ஸ்பின்னராக உருவாகிவிட்டதால், 3வது ஸ்பின்னராக அவர் இருப்பார் என்று கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலை மட்டுமே இந்திய அணி பிரதானமாக முன்னிலைப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கூட ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த 3 போட்டிகளிலும் கேஎல் ராகுல் முதல்நிலை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியிலும் கம்பீர் கேஎல் ராகுலுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் அதிருப்தி

இதனால் ரிஷப் பண்ட் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் கார் விபத்து நடப்பதற்கு முன்பாக கேஎல் ராகுல் இந்திய ஒருநாள் அணிக்காக நிரந்தரமாக ஆடி வந்தார். அதன்பின் கம்பேக் கொடுத்த போது, ஒருநாள் அணியில் மட்டும் ரிஷப் பண்ட்-க்கு முறையான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏற்கனவே டி20 அணியில் சஞ்சு சாம்சன் முதல்நிலை விக்கெட் கீப்பர் அந்தஸ்துக்கு வளர்ந்துவிட்டார். தற்போது ஒருநாள் அணியிலும் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் மட்டுமே நீடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் பயிற்சியின் போதும் அதிக ஈடுபாட்டுடன் இல்லை என்று கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles