அடி தூள்.. சிஎஸ்கேவில் இணைகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.. தோனிக்கு அடுத்து பெரிய பொறுப்பு.. கொண்டாட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் ரசிகர்கள் யாரும் எதிர்பாராதவிதமாக தற்போது சென்னை அணியில் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், அதற்குப் பிறகு தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பொறுப்பை ஒன்றை ஏற்க உள்ளார். ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை என்றாலும் தற்போது அந்தப் பதவியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை புறநகர் பகுதியில் செயல் திறன் மையம் ஒன்றை திறக்க உள்ளது. இங்குதான் சென்னை அணி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இங்குதான் அஸ்வினுக்கு சென்னை நிர்வாகம் தலைமை பொறுப்பை வழங்கி இருக்கிறது.

- Advertisement -

அந்த மையத்தில் பயிற்சி பெறும் சென்னை வீரர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்குவது, என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்வது என முடிவு செய்யும் பொறுப்பை சென்னை நிர்வாகம் அஸ்வினுக்கு வழங்கி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஒரு பகுதி கட்டுப்பாடு எப்படி தோனியிடம் இருக்கிறதோ அதேபோல இந்த மையத்தின் கட்டுப்பாடு அஸ்வின் இடம் இருக்கும்.

இந்த மையத்தின் தலைமை பொறுப்பை அஸ்வின் ஏற்கும் பொழுது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை நிர்வாகம் அஸ்வினை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைமை செயல் அதிகாரி கூறும் பொழுது
“அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த சூழ்நிலையில் ஏலத்தின் தன்மையை பொறுத்து இறுதியாக முடிவு செய்யப்படும்.

- Advertisement -

இப்போது அஸ்வின் உயர் செயல்திறன் மையத்தில் பொறுப்பேற்கிறார். அதன் செயல்பாடுகள் முழுவதுமாக அவரே கவனிப்பார். அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதி ஆவார். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அணியான டிஎன்சிஏ முதல் டிவிசன் அணிக்காக விளையாடுவார்” என்று கூறி இருக்கிறார். அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆடத் துவங்கிய காலத்தில் இருந்து இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க:சிவம் தூபே உழைப்பில் கபில்தேவ் மாதிரி.. இந்தக் குறிப்பிட்ட விதியால் தான் எங்களால் அவரை முழுதாக பயன்படுத்த முடியவில்லை.. கூறுகிறார் சிஎஸ்கே பயிற்சியாளர்

பின் 2016ஆம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகி அதன் போட்டி அணியான கெம்ப்ளாஸ்ட் அணியுடன் இணைந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு அங்கிருந்து மாறி டேக் சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் இணைந்து அதன் டிஎன்பிஎல் அணியான திண்டுக்கல் டிராகன் அணியோடு இணைந்து விளையாடி வந்தார். அதற்குப் பிறகு திரும்பவும் தற்போது சிஎஸ்கே வின் மையத்தில் இணைந்து இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles