உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இது இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் போட்டியாகும்.
இன்றைய போட்டியில் இந்திய அணி ஆல்ரவுண்டர் சிவம் துபே பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிவம் துபே குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டபோது அதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அதில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான சிவம் துபே தேர்வு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பந்து வீசும் வாய்ப்பினை வழங்கவில்லை.
இந்திய டி20 அணியில் அவரை ஒரு ஆல் ரவுண்டராகவே பார்க்கப்பட்டு ரிங்கு சிங்கிற்கு பதிலாக சிவம் துபேவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய பேட்டிங் பொருத்தவரை மிடில் வரிசையில் களமிறங்கி சுழற் பந்துவீச்சை சிறப்பாக கையாள்வார் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே அவரை முக்கிய வீரராக இந்திய அணி பார்க்கிறது.
இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்பிங் சிவம் தூபே குறித்து கூறும்பொழுது
“சிவம் டுபேவின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் அவர் உழைக்கும் விதம் குறித்து பேசினால் அவர் ஒரு கபில் தேவைப் போன்றவர். அவர் ஒரு கடினமான உழைப்பாளி. ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக உழைத்து சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். எங்கள் அணியில் ஏற்கனவே ஆல் ரவுண்டர் வேலையை செய்யக்கூடிய வீரர்கள் இருந்தார்கள்.
இம்பாக்ட் பிளேயர் விதியின் காரணமாக டூபேவிற்கு பந்து வீசும் வாய்ப்பு வழங்க முடியாமல் போனது. இந்த விதியானது ஆல்ரவுண்டர் மற்றும் பகுதிநேர பந்துவீச்சாளர்களின் வேலையை குறைத்து விடுகிறது. இது உண்மையில் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வெட்கக்கேடானது. அவர் தனது பந்துவீச்சை சிறப்பாக வீசி வருகிறார்.
இதையும் படிங்க:நம் நாட்டு காவல்துறை போல் இல்லை.. இங்கு கடுமையான சட்டம் உள்ளது.. சிக்குனா அவ்வளவுதான்.. ரசிகர்களை எச்சரிக்கும் ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பையை பொறுத்தவரை அங்குள்ள ஆடுகளங்கள் மெதுவாகவே இருக்கும். அங்கு அவர் மெதுவான பந்துகளையும், கட்டர்களையும் வீசும் போது இந்திய அணிக்கு அதுபெரிதாக நம்மை பயக்கும். அவர் அவரது வேலையில் மிகக் கடினமான உழைத்து நல்ல முறையில் முன்னேறி வருகிறார்” என்று கூறி இருக்கிறார். டி20 உலக கோப்பை அணியில் ரோகித் சர்மா அவரை ஒரு ஆல் ரவுண்டராகவே பார்ப்பதால் அவருக்கு பந்து வீச்சிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் வலை பயிற்சியிலும் தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சி மேற்கொள்கிறார் என்ற தகவலும் வெளிவருகிறது

