நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் எளிதாக ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார் பேசியிருக்கிறார்.
மேலும் தொடர்ச்சியாக ஆர் சி பி அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக மாறி வருகிறது. நேற்றைய போட்டியில் கேசில்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கத்தில் புவனேஸ்வர் குமார், ராசிக் சலாம், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா என எல்லோரும் சிறப்பாக பந்துவீச்சு இருந்து வருகிறார்கள்.
இது குறித்து ரஜத் படிதார் பேசும் போது “குர்னால் பாண்டியா எப்போது என்ன பந்து வீசுவார் என்று எனக்கே தெரியாது. அவர் வித்தியாசமான கணக்கீடுகளை வைத்து வீசுவார். ஆனால் ஒரு விஷயம் அவர் மிகவும் தைரியமான ஒரு பவுலர். சுயாஸ் சர்மாவும் ஸ்டெம்ப் டு ஸ்டெம்ப் சிறப்பாக வீசினார்”
“மேலும் புவனேஷ்வர் குமார் மற்றும் கேசில்வுட் இருவரும் அனுபவமும் புத்தியும் கொண்ட பவுலர்கள். இவர்களால் என்னுடைய வேலை மிகவும் எளிதானதாக மாறிவிடுகிறது. மேலும் மற்ற பவுலர்களும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

