10 வருட வலி தோனிக்கு இருக்கு.. அதனால அவர் பேரவல் போட்டி விளையாடல – சுரேஷ் ரெய்னா உறுக்கம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி, தனது உடல்நிலை காரணமாக தொடர்ந்து விளையாடுவதில் சிரமங்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, அவரது இரண்டு முழங்கால்களிலும் ஏற்பட்ட வீக்கம் காரணமாக விளையாடுவது கடினமாகியுள்ளது. இதனால் தோனி தனது கடைசி போட்டியில் களமிறங்காததற்கான காரணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், தோனியின் உடல்நிலை மற்றும் அவரது ஓய்வு முடிவு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து ரெய்னா கூறும்போது, வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தோனி கடுமையாகப் பயிற்சி செய்ததாகவும், ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்ததன் காரணமாக அவரது இரண்டு முழங்கால்களிலும் வீக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். வெறும் இம்பாக்ட் பிளேயராக மட்டும் விளையாட தோனி விரும்பவில்லை என்றும், தொடர்ந்து போட்டியின் அழுத்தத்தைத் தாங்கும் நிலையில் அவரது உடல் இல்லை என்றும் ரெய்னா விளக்கியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles