தோனியின் ஓய்வு முடிவு இப்படித்தான் வெளியானதா? ரூபா குருநாத் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் ஓய்வு குறித்து ஒருமுறை மிகவும் அமைதியாக தெரிவித்த சுவாரஸ்யமான சம்பவத்தை சிஎஸ்கே நிர்வாகி ரூபா குருநாத் தற்போது பகிர்ந்துள்ளார். அணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய வீரர்களின் பெயர்களை காசி விஸ்வநாதன் படித்துக் கொண்டிருந்தபோது, தோனியும் வீடியோ காலில் இருந்துள்ளார்.
அந்தச் சூழ்நிலையில், தோனி கூறிய ஒரு சில வார்த்தைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் தனது முடிவை வெளிப்படுத்திய தோனி, அந்த நேரத்தில் மிகவும் அமைதியாக இருந்ததாக ரூபா குருநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரூபா குருநாத் கூறும்போது, “காசி வீரர்களின் பெயர்களைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தோனி மிகவும் மெதுவாக, ஒருவேளை அந்தப் பட்டியலில் என்னுடைய பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதன்பிறகு வீடியோ கால் துண்டிக்கப்பட்டது” என்று அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

