சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், இன்று சிஎஸ்கே அணி வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடரிலிருந்து எம் எஸ் தோனி தனது ஓய்வை தற்போது அறிவித்திருக்கிறார். குறிப்பாக அந்தப் பதிவு வெளியான நேரம்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்தச் சூழலில், தோனி தொடர்பான அறிவிப்பை சரியாக மதியம் 2.50 மணிக்கு சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இதிலுள்ள 2, 5, 0 ஆகிய எண்களைக் கூட்டினால் 7 வருகிறது.
இதனை கவனித்த ரசிகர்கள், தோனியின் ஜெர்சி நம்பரான 7-ஐ குறிப்பிட்டு ‘Thala For A Reason’ என சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தோனியின் 7-ம் நம்பருக்கும் சிஎஸ்கே வெளியிட்ட அறிவிப்பின் நேரத்திற்கும் இடையிலான இந்த ஒற்றுமை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விஷயமாக மாறியுள்ளது.

