தோனி இருந்ததால பிளமிங் அதிலிருந்து தப்பிச்சுட்டாரு.. இனிமேதான் சிஎஸ்கேக்கு ரியல் ஆட்டமே இருக்கு – முகமது கைஃப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் தலைமைப் பண்பு மற்றும் அவர் இல்லாத குறையை சிஎஸ்கே அணி எப்படி உணரும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மற்ற வீரர்கள் செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை தோனி துணிச்சலாக எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், தோனியின் தலைமைப் பண்பு குறித்து முகமது கைப் சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே தோல்வியடையும்போது பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை விட தோனியையே ரசிகர்கள் அதிகம் விமர்சிப்பார்கள். ஆனால், வெற்றிக்கான பாராட்டுகளைப் பெறும்போது விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தோனி புரிந்துகொண்டிருந்தார். மற்ற வீரர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்கும் நிலையில், தோனி அதற்குப் பயப்படவில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து கைப் கூறும்போது, அணிக்கான திட்டங்களை வகுப்பது, வீரர்களைத் தேர்வு செய்து வளர்த்தெடுப்பது, சீனியர்களையும் ஜூனியர்களையும் சரியாகக் கையாள்வது என தோனி செய்த அனைத்தையும் சிஎஸ்கே தவறவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கேப்டனாக இல்லாதபோதும் களத்தில் இருந்து அணியைக் கட்டுப்படுத்தும் திறமை அவரிடம் இருந்ததாகவும், மென்டராக இருப்பதற்கும் களத்தில் இருந்து வழிநடத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles