ரொம்ப பாவம்.. அதிரடியா ஆடியும் டிராவிட் மகனால் ஐபிஎல் 2025 ஆட முடியாது.. பிசிசிஐ விதியால் வந்த வினை

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் மகன் சமீத் டிராவிட் கர்நாடகாவில் நடைபெற்று வரும் மகாராஜா டி20 பிரிமியர் லீக் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமித் டிராவிடின் அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இதனால் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் அவர் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. எனினும் பிசிசிஐ, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்கு வைத்திருக்கும் விதிமுறையால் சமித் டிராவிட் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. அதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

- Advertisement -

ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் கர்நாடக மாநில பள்ளி அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி வந்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சார்பாக நடத்தப்படும் மகாராஜா டி20 பிரிமியர் லீக் போட்டிகளுக்கான ஏலத்தில் கலந்து கொண்டார். இதில் மைசூர் வாரியர்ஸ் அணி சமித் டிராவிடை ஏலத்தில் எடுத்தது. அந்த அணிக்காக மிடில் ஆர்டரில் களம் இறங்கிய சமித் டிராவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதிரடி வீரர் மற்றும் மிதவேக பந்துவீச்சாளரான சமித் டிராவிட் வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வர இருக்கின்ற 2025 ஐபிஎல் தொடரில் சமித் டிராவிட் விளையாட முடியாது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பிசிசிஐ சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் தான் வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியும்.

- Advertisement -

பிசிசிஐ விதிமுறைகளின் அடிப்படையில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர் குறைந்தபட்சம் 2 லிஸ்ட் ஏ அல்லது 2 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். அவ்வாறான வீரர்களை மட்டுமே அணிகள் தேர்விற்கு பரிசீலிக்க முடியும். மேலும் 2 முதல் தர போட்டிகள் அல்லது லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி இருக்கும் வீரர்கள் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.

ஆனால் ராகுல் டிராவிட்டின் மகனான சமித் டிராவிட் கர்நாடக மாநில அணிக்காக இதுவரை ஒரு முதல் தரப் போட்டியில் கூட விளையாடியதில்லை. அவர் கர்நாடக மாநிலத்தின் அண்டர் 19 அணியில் விளையாடியிருக்கிறார். மேலும் கூச் பீகார் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரை வென்ற கர்நாடக அணிலும் சமித் டிராவிட் இடம் பிடித்துள்ளார். எனினும் அவர் கர்நாடக மாநில முதல் தரப் போட்டிகளுக்கான அணியில் விளையாடியது இல்லை.

- Advertisement -

தற்போது மகாராஜா டி20 லீக் போட்டியில் விளையாடி வரும் அவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இதன் காரணமாக வர இருக்கின்ற சையது அலி முஸ்தாக் டி20 போட்டி தொடருக்கான கர்நாடக அணியில் சமித் டிராவிட் இடம்பெறலாம். அவ்வாறு கர்நாடக மாநில சீனியர் அணியில் இடம் பெற்று 2 அல்லது அதற்கு அதிகமான போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் சமித் டிராவிட் 2025 ஆம் வருடத்தின் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles