இன்று ஐபிஎல் தொடரில் இதுவரையில் தோல்வி அடையாத பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியை எப்படி அவுட் செய்ய வேண்டும்? என புஜாரா யோசனை கூறியுள்ளார்.
கடந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்சி 12 சிக்ஸர்களுடன் 36 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவரைப் பார்த்து ஓவர்கள் விளையாட விட்டாலே ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும் திறமை கொண்டவராக இருக்கிறார்.
இதுகுறித்து புஜாரா பேசும் போது “இந்த போட்டியில் முதல் ஓவரை வீச போகும் அர்ஸ்தீப் இடது கை பவுலர் என்பதால் அவர் ஓவர் ஸ்டெம்பில் இருந்து வந்து வீசுவார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் குறைந்தது ஒரு ஓவரில் நான்கு பந்துகளையாவது மிடில் மற்றும் ஆப் ஸ்டெம்ப் லைனில் வீச வேண்டும்”
“இதே லைனில் வீசிதான் மோசின் கான் சூரியவன்சி விக்கெட்டை கைப்பற்றினார். எனவே பஞ்சாப் இந்த திட்டத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் போது இவரது விக்கெட்டை உங்களால் வீழ்த்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

