நேற்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் நூர் அகமத் சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் அவரது பந்துவீச்சு திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் மட்டும் விட்டுத்தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிடில் ஓவரில் சிறந்த தாக்கத்தை வெளிப்படுத்தியதால் சிஎஸ்கே எளிதாக வெற்றி பெற்றது.
இதுகுறித்து பேசிய நூர் அகமத் “முதலில் அணியின் வெற்றியில் என்னுடைய பங்களிப்பு இருந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நேற்று பனிப்பொழிவும் ஈரப்பதமும் மிகவும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக என்னுடைய விரல்களை உலர வைப்பதில் நான் பெரிய கவனம் செலுத்தினேன். இதனால்தான் சரியான இடத்தில் பந்து வீச முடிந்தது”
“இது சிறப்பான ஒரு ஆடுகளம். பந்து கொஞ்சம் நின்று வந்தது. எனவே நாங்கள் இதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். மேலும் வேகத்தை மாற்றி வீசுவது சிறந்த பலனை எப்பொழுதும் தரும். இந்த ஆடுகளத்தில் நான் 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய பந்துகள் சிறப்பான முறையில் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

