வீடியோ: 6 ஃபோர்ஸ்.. 7 சிக்ஸ்.. 250 ஸ்ட்ரைக் ரேட்.. லக்னோ நிக்கோலஸ் பூரன் டெல்லி எதிராக மாஸ் பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் நான்காவது போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 209 ரன்களுக்கு 8 விக்கெடுகள் இழந்தது. லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி விறுவிறுப்பாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவர் பிளேவில் அதிகமான ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது அதிவேக அரை சதத்தை பதிவு செய்த அவர் 36 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ஸ் ஆட்டமிழந்தாலும் அவருடன் எதிர் முனையில் விளையாடிய நிக்கோலஸ் பூரன் நேற்றைய போட்டியில் ருத்ர தாண்டவமே ஆடினார். வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் என அனைவரையும் பவுண்டரி லைனுக்கு அப்பால் விரட்டிய அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மீண்டும் ஒரு அரை சதத்தை நேற்று பதிவு செய்தார்.

- Advertisement -

நிக்கோலஸ் பூரன் களத்தில் இருக்கும் வரை லக்னோ அணி 240 ரன்கள் குவிக்கும் நிலையில் வலுவாக இருந்தது. குறிப்பாக டெல்லி அணியின் வீரர் ஸ்டப்ஸ் பந்தில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்க விட்டு தனது அரை சதத்தை நிறைவு செய்த பூரன் தொடர்ந்து டெல்லி பந்து வீச்சாளர்களை எல்லை கோட்டிற்கு அப்பால் விரட்டி ரசிகர்களையும் எதிரணியினரையும் மிரள வைத்தார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஸ்டார்க் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

மேலும் இந்த போட்டியில் வெறும் 30 பந்துகளில் 75 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 7 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். நேற்றைய போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 250 ஆகும். பூரன் ஆட்டமிழந்தது லக்னோ அணியின் ரன் விகிதத்தை இறுதி ஓவர்களில் பெருமளவு பாதித்தது.

- Advertisement -

அவரது விக்கெட்டிற்கு பிறகு லக்னோ அணியினரால் வேகமாக ரன்களை குவிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் 250 ரன்களை எளிதாக கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லக்னோ அணி இறுதியாக 209 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதனைத் தொடர்ந்து தங்களது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இந்த வருட ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணியின் வீரர் அசுதோஷ் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி திரில்லிங் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் போது நிக்கோலஸ்
பூரனின் ருத்ரதாண்டவ வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles