2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நீ சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிறந்த அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதில் நான்கு இந்திய வீரர்களிடம் பெற்றிருந்தாலும் அந்த அணி சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 45 லீக் போட்டிகள் 2 அரை இறுதி போட்டிகள் மற்றும் 1 இறுதிப் போட்டி என முத்தம் 48 போட்டிகளைக் கொண்டது. இதில் 45 லீப் போட்டிகள் முடிவில் இந்தியா சவுத் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அரை இறுதிப் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கிறது. இதில் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட 2023 ஆம் ஆண்டின் சிறந்த உலகக் கோப்பை அணியை ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. இந்த அணியில் இந்திய வீரர்கள்4 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் 3 ஆஸ்திரேலியா வீரர்களும் 3 சவுத் ஆப்பிரிக்கா வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர். நியூசிலாந்து அணியில் ஒரு வீரரும் இலங்கை அணியில் ஒரு வீரரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களைக் கொண்டு இந்த அணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியின் துவக்க வீரராக தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த டேவிட் வார்னர் இடம் பெற்று இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவிந்த்ரா இடம் பெற்றுள்ளார். நான்காவது இடத்தில் இந்திய அணியின் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார் மேலும் அணியின் கேப்டனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் துணை கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் இடம் பெற்று இருக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மேக்ரோ யான்சன் இடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருக்கிறார். இந்த உலகக்கோப்பை அணியின் பந்து வீச்சு வரிசையில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முகமது சமி ஒன்பதாவது இடத்திலும் பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவும் பதினொன்றாவது வீரராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்று இருக்கிறார். பனிரெண்டாவது வீரராக இலங்கை அணியின் தில்ஷான் மது ஷங்கா இடம் பெற்றுள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா அணியின் டிகாக் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா மூன்றாவது இடத்திலும் ரோகித் சர்மா நான்காவது இடத்திலும் டேவிட் வார்னர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்களும் இந்த அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். ஆனால் நான்காவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இருக்கும் டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளார் .
மேலும் இந்த உலகக் கோப்பை அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா அணியிலும் இடம்பெறவில்லை. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரை இறுதிக்கு அழைத்துச் சென்ற ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாததும் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த 2023 உலக கோப்பையின் சிறந்த அணி:
குயின்டன் டிகாக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்தரா, விராட் கோலி( கேப்டன்), எய்டன் மார்க்ரம், கிளன் மேக்ஸ்வெல், மேக்ரோ யான்சன் , ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, ஆடம் ஜாம்பா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் தில்ஷான் மதுஷங்கா.

