அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மாற்றும் நிகழ்வில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து வாங்கி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா மும்பை அணிக்கு இந்த மினி ஏலத்தில் எந்த ஒரு தேவையும் இருக்காது என்று நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “மும்பை அணிக்கு அடுத்த ஐபிஎல் தொடரில் என்ன தேவை என்பதை விட இப்போது அவர்களிடத்தில் குறைந்த பணம் இருக்கிறது என்பது மட்டுமே முக்கியமானது. மேலும் நடைபெறும் நாளில் அவர்களுக்கு ஒரு நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் தேவைப்படுகிறது. மேலும் அவர்கள் நண்பர்களோடு உட்கார்ந்து சாட்டிங் செய்து அரட்டை அடித்துக் கொண்டு இருக்கலாம்.
அதன் பிறகு அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் பார்த்துக் கொண்டு இருக்கலாம் அந்த நாளில் இவர்களுக்கு இந்த மூன்று அல்லது நான்கு தேவைகள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு நல்ல சாப்பாடு அல்லது காபி போன்ற உணவுப் பொருட்கள் தேவை என்பதை தவிர வேறு எந்த தேவையும் அவர்களுக்கு இருக்காது. அவர்கள் ஏற்கனவே நன்றாக தயாராக இருக்கிறார்கள். மும்பை அணிக்கு கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன் தேவைப்பட்ட நேரத்தில் குஜராத் அணியிடமிருந்து ரூதர்போர்டை வாங்கி அணியை வலுப்படுத்தி விட்டார்கள்.
இதையும் படிங்க:குழந்தை வடிவில் ஒரு.. 32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி.. 15 சிக்ஸ் அடித்து சாதனை!
மேலும் அவர்களுக்கு தீபக் சாகார் காயம் அடைந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சர்துல் தாக்கூரை உள்ளே கொண்டு வந்து விட்டார்கள். மேலும் அவருக்கு இங்குள்ள நிலைமைகள் குறித்து நன்றாகவே தெரியும் ” என்று அவர் பேசியிருக்கிறார்.

