“கிங் கோலிக்கு எதிரா தல தோனியின் திட்டம்”..2021லயே பக்காவா பிளான் பண்ணிட்டாரு.. சொல்கிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி களத்தில் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..

- Advertisement -

இதன் முதல் போட்டிக்காக தொடக்க நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ட்ரோலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ரசிகர்களுக்கு சற்றும் சளைக்காதவாறு இரு அணிகளின் முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

பொதுவாகவே இரு பலமான அணிகள் மோதிக் கொள்வதால் இதனுடைய எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருக்கும். இதற்கு தகுந்தார் போலவே நடந்து முடிந்த மினி ஏலத்தில் இரு அணிகளும் சிறப்பான வீரர்களை வாங்கி தங்கள் அணிகளை வலுப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக பெங்களூரு அணி கேமரூன் கிரீனை மும்பை அணியிடமிருந்து 15 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் முந்தைய சீசனில் ஏற்பட்ட பந்துவீச்சு குழப்பங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அதற்குத் தகுந்தவாறு வீரர்களை வாங்கியது. மேலும் சென்னை அணியும் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் டாரி மிச்சல், இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் சமீர் ரிஸ்வி ஆகியோரை வாங்கி அணியினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது சுழற் பந்துவீச்சு. ஒரு சீசனில் சென்னை மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறுவதால் சுழற் பந்துவீச்சை முக்கியமாக கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு வீரர்களை வாங்கி வருகிறது. இந்த ஆடுகளத்தில் பந்து சுழன்றும், மேலும் பெரிய வேகம் இல்லாமல் தாழ்வாகவும் வரும். இதனால் மற்ற அணிகள் சென்னை மைதானத்தில் ஜெயிப்பது என்றால் சற்று கடினமான காரியம் ஆகும்.

- Advertisement -

பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சென்னை தவிர மற்ற மைதானங்களில் சரவெடி ஆட்டக்காரராக திகழ்ந்து இருக்கிறார். சென்னை மைதானத்தை தவிர்த்து சென்னைக்கு எதிரான 30 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் குவித்து இருக்கிறார். இதனால் சொல்லிக் கொள்ளும்படி சென்னை மைதானத்தில் இவர் பெரிய ஸ்கோர்கள் அடித்ததில்லை.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை இனியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து கூறும்போது
“விராட் கோலி ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர். அவரது சாதனைகள் எதுவும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சென்னை அணிக்கு எதிராகவும் மிகச் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். ஆனால் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு எம் எஸ் தோனி விராட் கோலிக்கு எதிராக பவர் பிளேயில் சில திட்டங்களை வைத்திருக்கிறார்.

அதனால் அந்த ஆண்டுக்குப் பிறகு விராட் கோலியால் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை. ஐந்து முறை விளையாடி பவர் பிளேயில் மூன்று முறை அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்.ஆனால் இது ஒரு சரவெடி மோதல். விராட் கோலி இந்த சீசனில் நட்சத்திர ஆட்டக்காரராக மிகச் சிறந்து விளங்குவார். ஆனால் சென்னை அணிக்கு எதிராக அவர் ஆவரேஜ் குறைவுதான் என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles