முதல் பந்தை வீசும் பொழுதே உடலில் வலி ஏற்படுவதாக கூறினார்.. இளம் வீரர் மயங்க் யாதவ் குறித்து கேப்டன் கே எல் ராகுல் பேட்டி

லக்னோ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாடின. சிறப்பாக விளையாடிய லக்னோ அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

முதலில் பந்து வீசிய லக்னோ அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக வதேரா 46 ரன்களும், டிம் டேவிட் 35 ரன்கள் குவித்தனர். லக்னோ அணித்தரப்பில் பந்து வீசிய மோசின் கான் நான்கு ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணிக்கு அணியின் கேப்டன் கே எல் ராகுல் 28 ரன்களில் வெளியேறினாலும், அனுபவ வீரரான ஸ்டாய்னிஷ் 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மிகச் சிறப்பாக விளையாடிய இவர் லக்னோ அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதற்குப் பிறகு தீபக் ஹூடா 18 ரன்கள் பூரான் 14 ரன்களும் குவிக்க, 19 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது லக்னோ அணி. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மும்பை அணிக்கு ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பு முடிந்துவிட்டது.

பின்னர் பேசிய கேப்டன் கே எல் ராகுல் இளம் வீரர் மயங்க் யாதவ் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது
“போட்டி கடைசி ஓவர் வரை சென்றாலும் எங்களிடம் அனுபவமான பேட்ஸ்மேன்கள் இருந்தனர். பூரான் மற்றும் பாண்டியா ஆகியோர் களத்தில் இருந்ததால் எங்களுக்கு வெற்றி குறித்து கவலை பெரிதாக ஏற்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் 160 ரன்கள் குவித்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும்.

- Advertisement -

இங்கு வந்து விளையாடும் அணி ஆடுகளத்தை புரிந்து விளையாட நிச்சயமாக சிறிது நேரம் எடுக்கும். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வந்து வீசி எங்கள் பேட்ஸ்மேன்களின் பணியை எளிதாக்கிவிட்டனர். வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாகும். நாங்கள் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதை அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க:2 போட்டியிலும் நல்லா விளையாடிருக்காரு.. சீக்கிரம் இந்தியாவுக்காகவும் விளையாடுவார்.. ஆனா நான் வாய்ப்பு தராம விட்டுட்டேன்.. தோல்விக்குப்பின் ஹர்திக் பாண்டியா பேட்டி

காயம் அடைந்து வெளியே சென்ற மயங்க் யாதவிடம் நான் இன்னும் அவரிடம் பேசவில்லை. அவர் 21 வயதே ஆன இளைஞர். அவர் வேகமாக வீசுகிறார் என்பதை விட அவர் இன்னும் நிறைய போட்டியில் விளையாட வேண்டும். இந்த போட்டியில் முதல் பந்தை வீசும் பொழுதே உடலின் பக்கவாட்டில் வலி ஏற்படுவதாக கூறினார். அவருக்கு நாங்கள் ரசித்து விளையாட முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles